மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ராஜபட்ச அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்: கருணாநிதி

ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களுக்கு இன்னமும் உரிய பரிகாரமும், நியாயமும் கிடைக்கவில்லை. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச

News image
Updated On :11 மே 2013, 1:44 pm

ஈழத் தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான ராஜபட்ச அரசு மீது சர்வசேத விசாரணை நடத்த தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்:

ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களுக்கு இன்னமும் உரிய பரிகாரமும், நியாயமும் கிடைக்கவில்லை. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு, விசாரணை முடிக்கப்பட்டு நீதி நிலாநாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது.

பல விசாரணைக் குழுக்கள், சர்வதேச அமைப்புகள் இலங்கையில் நடைபெற்ற கொடுமைமைகளை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று உணர்த்தியுள்ளன. கொடுமைகளுக்கான சான்றுகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. மேலும் ஒரு சான்றாக சர்வதேச பொதுமன்னிப்பு சபை விசாரணை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் இலங்கையில் நடைபெற்ற மற்றும் நடைபெற்று வரும் கொடுமைகளை அம்பலப்படுத்தியுள்ளது. போர் முடிந்த பிறகும் அரசியல், சமூக நடவடிக்கைகளில் இலங்கை அரசு பொறுமையின்மையை கடைப்பிடித்து வருகிறது. மனித உரிமைகளும், சர்வதேச சட்டங்களும் அப்பட்டமாக மீறப்படுகின்றன.அநீதி இழைக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைக்கவில்லை. போருக்கு முன்னும் பின்னும் காணாமல் போனவர்கள் பற்றி எந்தத் தகவல்களும் இல்லை என பொதுமன்னிப்பு சபை கூறியுள்ளது.

பொதுமன்னிப்பு சபை, சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஐ.நா. பொதுச்செயலாளரால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு போன்றவை இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நம்பகத் தன்மை கொண்ட விசாரணை நடத்த வேண்டும் என குரல் கொடுத்தும் இதுவரை பலன் கிடைக்கவில்லை.எனவே, ராஜபட்ச அரசின் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த நாமும் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.