ஆருஷி, ஹேம்ராஜ் இரட்டைக் கொலை வழக்குத் தொடர்பாக கடந்த 2 நாட்களில், குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் ராஜேஷ் தல்வாரிடம் 411 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த வழக்கில் 14 முக்கிய சாட்சிகளின் சாட்சியத்தை மீண்டும் பதிவு செய்யக் கோரி தல்வார் சார்பில் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
நேற்று தல்வாரிடம் நடந்த வழக்குரைஞரின் குறுக்கு விசாரணையின் போது, சம்பவம் நடந்த இரவு தான் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் கொலை பற்றி தனக்கு தெரியாது என்றும் தல்வார் கூறினார். ஆனால், அன்றைய இரவு, தல்வார் இணையத்தில் இருந்ததற்கான சான்றுகள் இருப்பதாக சிபிஐ தெரிவித்தது. மேலும், அவர் இணையத்தைப் பயன்படுத்தியிருந்ததற்கான சான்றுகளையும் சிபிஐ நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை!







