ஐபிஎல் போட்டியைத் தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஐபிஎல் போட்டியைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், இப்போட்டியில் பங்கேற்றுள்ள சில வீரர்கள் செய்யும் முறைகேடு காரணமாக, போட்டியையே தடை செய்வது என்பது தவறானது என்று தெரிவித்துள்ளது.
லக்னோவைச் சேர்ந்த சுதர்ஷ் அஸ்வதி தாக்கல் செய்த மனுவில், ஐபிஎல் போட்டிகளில் வீரர்களை ஏலம் எடுப்பதில் இருந்து பல்வேறு முறைகேடுகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ஐபிஎல் போட்டியில், பலரது கருப்புப் பணமும், சமூக விரோதமாக சம்பாதித்த பணமும் அதிகமாக குவிந்து வருகிறது. இதனை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், விசாரணை முடியும் வரை ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை இன்று காலை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ். சௌஹான் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இதனை அவசர மனுவாக விசாரிக்க ஏற்றுக் கொண்டது. மேலும், மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி, இன்று 2 மணியளவில் மனுவை விசாரித்த நீதிபதிகள், ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள சில வீரர்கள் செய்யும் முறைகேடு காரணமாக, போட்டியையே தடை செய்வது என்பது தவறானது என்று தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியிலிருந்து கோதுமை மீண்டும் கொள்முதல் செய்யும் இந்திய உணவு கழகம்: 21,000 விவசாயிகள் பயன்பெறுவா்

சாமி சிலையைத் தொட்டு வழிபடுதல்: பிறப்பின் காரணமாக தடுத்தால் அரசமைப்புச் சட்டம் தலையிட முடியுமா?

கனடா: இந்திய மாணவரை சுட்டுக் கொன்றவருக்கு ஆயுள் சிறை

கோடை நோய்களுக்கு பாராசிட்டமால் கூடாது: பொது சுகாதாரத் துறை
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


