செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட ஸ்டன்ட் துணை நடிகர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் வீடு புகுந்து திருட்டு மற்றும் செயின் பறிப்பு குற்றங்கள் நடப்பதால் அவற்றை தடுக்கவும், செயின் பறிப்பு குற்றவாளிகளை பிடிக்க மாநகர காவல் ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில் உதவி ஆணையாளர் சந்திரசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கடந்த மே மாதத்தில் இராமாபுரம் சாந்தி நகர் மெயின் ரோடு பகுதியின் சீனிவாசன் என்பவரை வழிமறித்து செயினை பறித்து கொண்டு தப்பி ஓடும் போது அந்தப் பகுதியின் பணியில் இருந்து தனிப்படை போலீசார் மடக்கி கைது செய்தனர். மேலும் விசாரனையில் 6 வழக்குகளில் வளசரவாக்கம் பகுதியில் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.
ஆழ்வார்த்திருநகரில் நடந்து சென்ற ஒரு பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை அறுத்து சென்றதாகவும், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பென்னிடம் தாலி செயினை அறுத்துக் கொண்டு சென்றதாகவும், பின்னர் திருவள்ளுவர் சாலையில் பெண்ணிடம் தாலி செயினை அறுத்துக் கொண்டு சென்றதாகவும் விசாரணையில் கூறியுள்ளான்.
தனக்கு திருமணம் ஆகி 12 வயதுள்ள மகன் இருப்பதாகவும், சின்னத்திரை மற்றும் சினிமாவில் ரவுடி போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், வருமானம் சரிவர கிடைக்காததாலும் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார் துணை நடிகர்.
அதன்படி 25 சவரன் கைப்பற்றப்பட்டு, வழக்கு பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப் பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாமி சிலையைத் தொட்டு வழிபடுதல்: பிறப்பின் காரணமாக தடுத்தால் அரசமைப்புச் சட்டம் தலையிட முடியுமா?

கனடா: இந்திய மாணவரை சுட்டுக் கொன்றவருக்கு ஆயுள் சிறை

கோடை நோய்களுக்கு பாராசிட்டமால் கூடாது: பொது சுகாதாரத் துறை

கேரளம்: வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக இவிஎம் அறைகளைத் திறக்கக் கூடாது!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

