இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களை விட, வட மாநிலங்களில் வெயில் அதிகமாக வாட்டி வருகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கோடைக் காலம் அனல் வாட்டி எடுக்கும் காலமாக மாறியுள்ளது. தில்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் மதிய வேளைகளில் சாலைகளில் ஆள் நடமாட்டமே இல்லாத அளவுக்கு வெயில் அடிக்கிறது. அனல் காற்று வீசுகிறது.
தில்லியில் சராசரியை விட 5 டிகிரி அதிகமாக 44.5 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தில்லியில் வெயில் வாட்டி எடுப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை!






