இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத் தரகர்களின் வீடுகளுக்கு சீல்

சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்களின் வீடுகளில் சோதனை நடத்திய சிபிசிஐடி காவல்துறையினர், வீடுகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

Updated On :21 மே 2013, 3:27 pm IST

சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்களின் வீடுகளில் சோதனை நடத்திய சிபிசிஐடி காவல்துறையினர், வீடுகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

வேப்பேரியில் உள்ள உத்தம் ஜெயின் என்பவரது வீட்டில் இன்று சோதனை நடத்திய சிபிசிஐடி காவல்துறையினர், சுமார் 3 லட்சம் ரொக்கம், 12 சிம்கார்டுகள், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  உத்தம் ஜெயின் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க தீவிர வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், கீழ்ப்பாக்கம் சஞ்சய் பாப்னா வீட்டில் இருந்து செல்போன், லேப்டாப், சூதாட்டம் தொடர்பான சில ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. அயனாவரத்தில் உள்ள பிரசாந்த் வீடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.