சூதாட்டப் புகாரில் சிக்கியுள்ள ஐபிஎல் போட்டியை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு அவசர மனுவாக ஏற்று விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
லக்னோவைச் சேர்ந்த சுதர்ஷ் அஸ்வதி தாக்கல் செய்த மனுவில், ஐபிஎல் போட்டிகளில் வீரர்களை ஏலம் எடுப்பதில் இருந்து பல்வேறு முறைகேடுகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ஐபிஎல் போட்டியில், பலரது கருப்புப் பணமும், சமூக விரோதமாக சம்பாதித்த பணமும் அதிகமாக குவிந்து வருகிறது. இதனை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், விசாரணை முடியும் வரை ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ். சௌஹான் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இதனை அவசர மனுவாக விசாரிக்க ஏற்றுக் கொண்டது. மேலும், மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










