பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண வான்வெளியில் இந்திய ஜெட் போர் விமானங்கள் இன்று அத்துமீறி நுழைந்ததாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை குற்றம் சாட்டியுள்ளது. இதை இந்திய விமானப் படை மறுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 2 ஜெட் போர் விமானங்கள், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பாக்பத்தன் மாவட்டத்தில் உள்ள ஹெட்சுலேமான்கி என்ற இடம்வரை அத்துமீறி நுழைந்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து 7 கி.மீ. வரை இந்திய விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளன. சுமார் ஒரு நிமிடம் வரை பாகிஸ்தான் பகுதியில் இருந்த அந்த இரு விமானங்களும், பின்னர் இந்தியப் பகுதிக்கு திரும்பிச் சென்றன. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட் பகுதிக்கு போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப் படை அனுப்பிவைத்தது என்றார்.
இத்தகவலை ஜியோ நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.ஆனால், இதை மறுத்துள்ள இந்திய விமானப் படை அதிகாரிகள், போர் விமானங்கள் எதுவும் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழையவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘அதிமுகவுக்கு போடும் ஓட்டு மக்களுக்கு பயனளிக்கும்’

இந்தத் தேர்தலில் தேமுதிகதான் 'கேம் சேஞ்சர்': பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு நேர்காணல்

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: தமிழகமே கவனிக்கும் திமுகவின் கோட்டை!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

