இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

ஆத்தூர் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து விழுந்து விபத்து

ஆத்தூர் அருகே சின்னப்புனல்வாசல் பகுதியில், தனியார் பள்ளிக்குச் சொந்தமான வகானம் ஒன்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.

Updated On :12 ஜூன் 2013, 10:18 am IST

ஆத்தூர் அருகே சின்னப்புனல்வாசல் பகுதியில், தனியார் பள்ளிக்குச் சொந்தமான வகானம் ஒன்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.

இன்று காலை சுமார் 40 மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வாகனம் சாலையில் சென்று கொண்டிருந்தது. வாகனத்தை ஓட்டுநர் பாலகுமார் வேகமாக இயக்கியதாகக் கூறப்படுகிறது.

அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. பேருந்து விபத்துக்குள்ளானதும் தப்பியோட முயன்ற பாலகுமாரை, பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

மாணவ, மாணவிகள் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.