/

சிலிண்டர் வெடித்து விபத்து: காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் பலி

புதுக்கோட்டை அருகே பொன்னன்வயல் கிராமத்தில் கடந்த 5 -ம் தேதி நேரிட்ட சமையல் சிலிண்டர் வெடித்த விபத்தில் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 பேரில் 2 பேர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.

Updated On :12 ஜூன் 2013, 6:50 am

புதுக்கோட்டை அருகே பொன்னன்வயல் கிராமத்தில் கடந்த 5 -ம் தேதி நேரிட்ட சமையல் சிலிண்டர் வெடித்த விபத்தில் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 பேரில் 2 பேர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.

திருமயம் வட்டம், நமனசமுத்திரம் அருகே  பொன்னன்வயல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் பெரியசாமி (46). இவர் சிற்பத்தொழிலாளி். இவரது வீட்டில் பயன்படுத்தி வந்த சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதால், அப் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் குமார்(40) என்பவரிடம் தகவல் அளித்து பழுது நீக்க வரச் செய்துள்ளார். இதையடுத்து சிலிண்டரில் உள்ள பழுதை  சரிபார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தீப்பிடித்து சிலிண்டர் வெடித்தது.

இதில், பெரியசாமியின் மனைவி பொன்னழகி(38), மாமனார் ராசு(56), மகன்கள் சுபாஷ்சந்திரபோஸ்(13), கண்ணன்(10), சந்தோஷ்(7), மகள் தனலெட்சுமி(15) ஆகியோர் காயமடைந்தனர். இவர்களில்  மதுரையிலுள்ள  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த  குமார்(40), தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுபாஷ்சந்திரபோஸ்(13) ஆகியோர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர். இது குறித்து நமனசமுத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.