நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

நாமக்கல்லில் 6 குழந்தைத் திருமணங்கள் நிறுத்தம்

நாமக்கல்லில் வெவ்வேறு இடங்களில் நடைபெறுவதாக இருந்த 6 குழந்தைகள் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.

Updated On :12 ஜூன் 2013, 11:06 am IST

நாமக்கல்லில் வெவ்வேறு இடங்களில் நடைபெறுவதாக இருந்த 6   குழந்தைகள் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மாணவிகள் உட்பட 18 வயது நிரம்பாத பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதாக ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, வெவ்வேறு இடங்களில் நடைபெறுவதாக இருந்த திருமணங்கள் இன்று நிறுத்தப்பட்டன.

திருமணம் நடைபெறும் இடத்துக்கு, ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள், குழந்தைகள் நல அமைப்பினர், வருவாய் துறையினர் சென்று திருமணத்தை நிறுத்தி பெண் குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தனர்.

மேலும், 18 வயதுக்கு  உட்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம். மீறி திருமணம் நடத்தி வைக்க முயன்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெண் மீற்றும் பையன்களின் பெற்றோரிடம் எச்சரித்து போலீசார் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கிக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.