எரிவாயுவுக்கு அதிக விலை நிர்ணயித்திருப்பதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கோரி அது குறித்து விசாரணை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா கூறியிருப்பதாவது, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும் வகையில், இயற்கை எரிவாயுக்கு மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி அதிக விலை நிர்ணயித்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து பிரதமருக்கு கடிதம் ஒன்றும் எழுதியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக முந்தைய பெட்ரோலியம் துறை அமைச்சர் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளார் தற்போதைய அமைச்சர் வீரப்ப மொய்லி. கிருஷ்ணா - கோதாவரி படுகையில் இயற்கை எரிவாயுவை எடுப்பதில், அரசுடனான ஒப்பந்தத்தை மீறியதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட ஒரு பில்லியன் டாலர்கள் அபராதத்தை வசூலிக்க ஜெய்பால் ரெட்டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால் அவை அனைத்தும் தற்போது கைவிடப்பட்டுவிட்டது.
அங்கு உற்பத்தி குறைந்ததால், ரூ.1.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு, அதனால், மின்சாரம், உரம் தயாரிப்பு ஆகியவை பாதிக்கப்பட்டது. இது அனைத்தையும் அறிந்துள்ள பெட்ரோலியம் அமைச்சர் வீரப்ப மொய்லி, தற்போது, ரிலையன்ஸ் நிறுவனம் அதிகமாக லாபம் அடையும் வகையில், ஏற்கனவே எரிவாயு விலையை நிர்ணயம் செய்த ரங்கராஜன் குழு பரிந்துரைத்த தொகையை விட அதிகமான தொகையை பரிந்துரைத்துள்ளார்.
நாட்டின் நலனை புறக்கணித்துவிட்டு, இப்படி ஒரு தனியார் நிறுவனத்தின் நலனுக்காக அமைச்சர் செயல்படுவது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். எனவே, இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், வீரப்ப மொய்லி பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார் குருதாஸ் தாஸ்குப்தா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு? ஈரான் சென்றார் பாக். ராணுவத் தலைமைத் தளபதி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


