ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

உத்தர்கண்டில் 14 ஆயிரம் பேர் மீட்பு : 60,000 பேர் தவிப்பு

உத்தர்கண்டில் வெள்ளத்தில் சிக்கி பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்த 14 ஆயிரம் பேரை பல்வேறு மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

News image
Updated On :21 ஜூன் 2013, 1:42 pm IST

உத்தர்கண்டில் வெள்ளத்தில் சிக்கி பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்த 14 ஆயிரம் பேரை பல்வேறு மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

எனினும், இன்னும் பல இடங்களில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல், பசியோடு பரிதவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் குறிப்பாக கேதார்நாத் கோயிலுக்கு அருகே மீட்புப் படையினர் நுழைய முடியாத பல இடங்களில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். சில இடங்களில் ராணுவ ஹெலிகாப்டர்கள் தரையிறங்கக் கூட இடமில்லாமல், வானத்தில் பறந்தபடியே பொதுமக்களை ஹெலிகாப்டர்களுக்குள் ஏற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும், ஹெலிகாப்டர்களுக்குள் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 10 பேரை மட்டுமே ஏற்ற முடியும் என்பதால், ஆயிரக்கணக்கானோரை மீட்க பல மணி நேரங்கள் ஆகின்றன.

சில இடங்களில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கயிறுகள் கட்டப்பட்டு அதன் வழியாக ஒவ்வொருவராக கரையேறும் நிலை உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.