திருச்செந்தூரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் ஆறுதல் கூறி, அரசின் நிவாரணத்தொகையினை வழங்கினார்.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், அமைச்சர் மற்றும் மாவட்டச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு இன்று முதன்முதலாக வந்து, சுவாமி தரிசனம் செய்தார். முன்தாக திருக்கோவிலுக்கு வந்த அமைச்சரை தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், உள்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணன், திருச்செந்தூர் பேரூராட்சித்தலைவர் மு.சுரேஷ்பாபு, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் லி.ஹேமலதா லிங்ககுமார், ஒன்றியச்செயலர் அமலி டி.ராஜன், நகரச்செயலர் வி.எம்.மகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து அமைச்சர் திருச்செந்தூர் மீனவர்காலனியில் ஞாயிற்றுக்கிழமையன்று தீ விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 8 குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 40 ஆயிரம் அரசு நிவாரணத் தொகையினை வழங்கினார். அப்போது திருச்செந்தூர் கோட்டாட்சியர் ப.கொங்கன், வட்டாட்சியர் ப.நல்லசிவன், வருவாய் ஆய்வாளர்கள் சங்கரநாராயணன், சின்னத்துரை, விஏஓ செல்வலிங்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் செல்லத்துரை, முன்னாள் ஒன்றியச்செயலர் மு.ராமச்சந்திரன், மாவட்ட விவசாய அணி செயலர் அக்ரி பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக தோழமைக் கட்சிக் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்குமா?

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை
திமுகவின் மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

தெலங்கானாவில் செயல்பாட்டிற்கு வந்த 176 மெகாவாட் சூரியசக்தித் திட்டம்!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



