புதிய குடும்ப அட்டைகள் பெறுதல், மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன் படி உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சென்னையில் 16 மண்டல பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் பொருட்டு இணைப்பில் குறிப்பிட்டுள்ள மையங்களில் ஜூலை 2013 மாதத்திற்கான மாதாந்திர குறைதீர் கூட்ட முகாம் 13.07.2013 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் பொது விநியோக திட்டத்தைச் செயல்படுத்தும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவு துறை மற்றும் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
அப்பகுதியை சுற்றி வாழும் பொது மக்கள் புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் பொது விநியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும் தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் தங்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள 16 மண்டல பகுதி வாழ் பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வ.எண்
மண்டலம்
கூட்டம் நடைபெறும் இடங்களின் பெயர்
1
சிதம்பரனார்
கந்தகட்டலா செல்லப்பிள்ளையார் செட்டி சத்திரம்,
ராமானுஜகூடம், 51, நாட்டுப்பிள்ளையார் கோயில் தெரு, சென்னை 1
(செலக்ட் தியேட்டர் அருகில்)
2
இராயபுரம்
சென்னை உயர்நிலைப்பள்ளி , 88 எஸ் என் செட்டி தெரு, இராயபுரம் , சென்னை 13, ( ஐ டீரிம் தியேட்டர் அருகில்)
3
பெரம்பூர்
சென்னை ஆரம்ப பள்ளி , சர்மா நகர் 1வது தெரு, வியாசர்பாடி, சென்னை 39
(பிள்ளையார் கோவில் அருகில்)
4
அண்ணாநகர்
சென்னை மேல்நிலைப்பள்ளி, பாலவாயல் சாலை, அயன்புரம், சென்னை 23 ,
5
அம்பத்தூர்
சென்னை தொடக்கப்பள்ளி, பெருமாள் கோயில் தெரு, ஆலப்பாக்கம், சென்னை 116
6
வில்லிவாக்கம்
ஸ்ரீ பாலகுருகுலம் தொடக்கப்பள்ளி,
4, திருமங்களம் சாலை, வில்லிவாக்கம், சென்னை 49 ,
(நாதமுனி தியேட்டர் பின்புறம்)
7
திருவொற்றியூர்
அரசினர் உயர்நிலைப்பள்ளி,
கண்ணதாசன் நகர், கொடுங்கையூர்,சென்னை 118,
(கொடுங்கையூர் காவல் நிலையம் பின்புறம்)
8
ஆவடி
ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளி, கோனாம்பேடு, சென்னை 77
9
தி.நகர்
சென்னை நடுநிலைப்பள்ளி, 18 ஈஸ்வரன் கோயில் தெரு, மேற்கு மாம்பலம் , சென்னை 33 ( காசி விஸ்வநாதர் கோயில் அருகில்)
10
மயிலாப்பூர்
மாநகராட்சி மண்டல அலுவலகம், 13வது மண்டலம், 135 எல் பி ரோடு,
அடையாறு , சென்னை 20 ,( அடையாறு சிக்னல் அருகில்)
11
பரங்கிமலை
இந்து சமூக நலக்கூடம் , 12, 6வது தெரு , இந்து காலனி, நங்கநல்லூர், சென்னை 61, (செல்லம்மாள் பள்ளி அருகில்)
12
தாம்பரம்
அரசினர் மேல்நிலைப்பள்ளி , அனகாபுத்தூர், சென்னை 70
(அம்பேத்கார் சிலை அருகில்)
13
சைதாப்பேட்டை
அரசினர் மேல்நிலைப்பள்ளி, திரௌபதி அம்மன் கோயில், 5வது தெரு,
வேளச்சேரி, சென்னை 42 ( வேளச்சேரி பைபாஸ் ரோடு)
14
ஆயிரம்விளக்கு
ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட மையம்,
அஷ்டபுஷம் சாலை, புரசைவாக்கம், சென்னை 12 (அங்காளம்மன் கோயில் தெரு )
15
சேப்பாக்கம்
சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பெல்ஸ் ரோடு, சேப்பாக்கம், சென்னை 5
16
சோழங்கநல்லுhர்
ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, நுஊசு சாலை, பாலவாக்கம், சென்னை 115 (பல்கலை நகர் வளாகம் அருகில்)
- என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரான் - அமெரிக்கா மோதல்: கத்தார் சென்றடைந்த அமெரிக்க தூதுக்குழு!

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமில்லை!

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

டி20 உலகக் கோப்பையில் அசத்திய அணிகளின் வீராங்கனைகள் ஐசிசி தவரிசையில் முன்னேற்றம்!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


