பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பொருளாதாரக் கொள் கை என்பதே கிடையாது என குற்றஞ்சாட்டியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன்.
திருவாரூரில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டியில்,
ஜூலை முதல் தேதி தில்லியில் இட துசாரிக் கட்சிகள், பார்வர்பிளாக் மற்றும் ஆர்எஸ்பி கட்சிகள் சார்பில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் நவீன பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக மாற்றுப் பொருளாதாரக் கொள்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
2002-ல் பாஜக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்க முடி வெடுத்தது. 2006-ல் காங்கிரஸ் கட்சி 10 சதவீத பங்குகளை விற்க முயற்சி மேற் கொண்ட து. தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்கு விற்பனை பின்னுக்குத் தள்ளப்பட்டது.
இடதுசாரிக் கட்சி தற்போது பிரகடனப்படுத்தியுள்ள மாற்றுப் பொருளாதாரக் கொள்கையை முன்வைத்து 2014 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த மாற்றுப் பொருளாதார க் கொள்கையை மக்களிடத்தில் எடுத்துக் கூறும் வகையில் தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் கூட்டம், கருத்தரங்கம் என பல்வேறு வடிவங்களில் பிரசாரம் செய்கிறது.
நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்க முயற்சிக்கும் மத் திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் கடந்த ஒரு வார காலமாக போ ராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் மின் உற்பத்தி பாதித்துள்ளது. எனவே பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை தடுத்தாலோ அல்லது மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்குவது தீர்வாக இருக் காது. தொழிற்சங்களின் முடிவுப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேஎண்டும். இப்பிரச்னை யில் சிபிஎம் தொழிற்சங்கங்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறது.
தர்மபுரியில் காதல் திருமணம் செய்து கொண்ட திவ்யா, இளவரசனின் பிரச்னை சாதிவெறிக் கண்ணோட்டத்தில் அணுகியதாலே பிரச்னை பெரிதானது. இளவரசன் குடியிருப்புப் பகுதி உள்ளிட்டப் பகுதிகள் தீ வைத்து சூறையாடப்பட்டது, தி்வ்யாவின் தந்தை நாகராஜ், திவ்யா வின் கணவர் இளவரசன் ஆகியோரின் உயிரிழப்பும் சாதிவெறி கண்ணோட்டத்தில் ஏற்பட்ட பிரச்னையே காரணம். இப்பிரச்னையில் சிபிஐ விசாரணை தேவையென சிபிஎம் வலியுறுத்து கிறது.
டெல்டா மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் 100 நாள் வேலைத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்கிறது. இத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளப்படி முழுமையான ஊதியம் மற்றும் வேலை கொடுக்க வேண்டும். வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பது உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்.
மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு அவரசச் சட்டத்தால் 90 சதவீத மக்கள் பயன்பெறுவார்கள் என்று உத்திரவாதம் அளிக்கிறது. இத்திட்டத்தால் 67 சதவீதத்தினரே பயன்பெறுவார்கள் என்ற கருத்தை சிபிஎம் முன்வைக்கிறது. விரைவில் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் இச்சட்டத்தை அவரசமாக ஏன் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். ரிலையன்ஸ் நிறுவனம் மத்திய அரசை மிரட்டுகிறது என்றார் ராமகிருஷ்ணன்.
பேட்டியின் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலர் ஐ.வி. நாகராஜன், செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.சுந்தரமூர்த்தி, பக்கிரிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக தோழமைக் கட்சிக் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்குமா?

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை
திமுகவின் மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

தெலங்கானாவில் செயல்பாட்டிற்கு வந்த 176 மெகாவாட் சூரியசக்தித் திட்டம்!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



