இளைஞர்களின் தாய் மண் நேசத்தை ஊக்கப்படுத்தி, நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு இளைஞர்களை ஈர்த்த மாமனிதர் மறைந்த எம்.எஸ். உதயமூர்த்தி என்றார் உயர்நீதிமன்ற நீதிபதி வி. தனபாலன்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை பெஸ்ட் கல்வி நிறுவனம் மற்றும் மிட்டவுன்ரோட்டரி சங்கம் சார்பில், மயிலாடுதுறையை அடுத்த மல்லியம் பெஸ்ட் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற, மக்கள் சக்தி இயக்க நிறுவனர் எம்.எஸ். உதயமூர்த்தியின் படத் திறப்பு விழாவில் அவர் பேசியதாவது :
ஒவ்வொருவரும் தாய் மண்ணை நேசிக்க வேண்டும், தாய் மண்ணிற்குத் தன்னால்இயன்ற தொண்டை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை தனது பேச்சு மற்றும்எழுத்தால், இளைஞர்களுக்குக் கொண்டுச் சென்றவர் மறைந்த மாமனிதர் எம்.எஸ்.உதயமூர்த்தி.நதிநீர் இணைப்பை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டு இளைஞர்களை ஊக்கப்படுத்தி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன்,இளைஞர்களுக்கு நல்ல சிந்தனைகளையும், சுய நம்பிக்கையையும் ஊக்கப்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர் அவர்.
முழுமையான ஜனநாயகம் மலர தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாக வேண்டும்,கல்வி கற்பித்த ஆசிரியர்களை மதிக்கும் மனப்பக்குவம் மாணவர்களுக்கு மேம்படவேண்டும் என்ற கருத்துகளை தொடர்ந்து வலியுறுத்திய எம்.எஸ். உதயமூர்த்தி மறைந்திருந்தாலும், அவரது கருத்துகள், நற்சிந்தனைகளை இளைஞர்கள் என்றும்மனதில் கொண்டிருப்பர் உயர்நீதிமன்ற நீதிபதி வி. தனபாலன்.
பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் அ. அய்யூப் தலைமை வகித்துப்பேசுகையில், நதிநீர் இணைப்புக்காக 2 ஆயிரம் கி.மீ நடைப் பயணம்மேற்கொண்டு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய எம்.எஸ். உதயமூர்த்தி,மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் (மயிலாடுதுறை அருகே உள்ள விளநகர் பகுதியில்பிறந்தவர்) என்பதில் மயிலாடுதுறையைச் சேர்ந்த அனைவருக்கும் பெருமை என்றார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் இரா. செல்வநாயகம்,எம்.எஸ். உதயமூர்த்தியின் நினைவுகள் மற்றும் கருத்துகளைப் போற்றிபேசினார்.எம்.எஸ். உதயமூர்த்தியின் குடும்பத்தைச் சேர்ந்த ஜெகதீசன் ஏற்புரையாற்றினார்.
மயிலாடுதுறை நீதிமன்ற முதன்மை சார்பு நீதிபதி லதா, கூடுதல் சார்புநீதிபதி செந்தூர்பாண்டி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஓம்பிரகாஷ்,நீதித் துறை நடுவர் தங்கமணி கணேஷ், விரைவு நீதித் துறை நடுவர் பிரியா,மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் பவானி சீனிவாசன், மிட்டவுன் ரோட்டரி சங்கசெயலாளர் முத்துசாமி மற்றும் வழக்குரைஞர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் செயலாளரும், மக்கள் சக்தி இயக்க முன்னாள் மாவட்டத் தலைவருமான ஆர். பாலாஜிபாபு வரவேற்றார். மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் வி. ராமன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
மகளிருக்கு இலவச பேருந்து சேவை! கேரள முதல்வர் தொடக்கி வைத்தார்!

ஜூன் 15: தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!

தமாகாவில் இருந்து யுவராஜா விலகல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


