தலைவா பட பிரச்னையில் தலையிட்டு அப்படம் வெளிவர உதவ வேண்டும் என முதல்வருக்கு நடிகர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 9-ஆம் தேதி வெளியாக வேண்டிய "தலைவா', பாதுகாப்பு பிரச்னைகள், வரி விலக்கு கோரிக்கை நிராகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தடைப்பட்டது. இதையடுத்து அப்படத்தை தமிழகத்தில் வெளிக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து வருகின்றனர். ஆந்திரம், கேரளம் மற்றும் வெளிநாடுகளில் திட்டமிட்டப்படி 9-ஆம் தேதி படம் வெளியானதால், தமிழகத்தில் "தலைவா' படத்தின் திருட்டு சி.டி.க்கள் வெளிவந்துள்ளன. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. இது குறித்து நடிகர் விஜய் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திட்டமிட்டப்படி தமிழகத்தில் படம் வெளியாகமல் இருப்பதால், திருட்டு சி.டி.க்களின் வருகை அதிகரித்துள்ளது. சேலத்தில் தலைவா படத்தின் திருட்டு சி.டி.க்கள் தயாரித்தவர்கள் பிடிப்பட்டுள்ளனர். திருட்டு சி.டி.க்களை தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்த ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன். என்.எல்.சி., காவேரி உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளில் தமிழக முதல்வர் திறம்பட செயல்பட்டு வருகிறார்.
இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து வருகிறார். முதல்வரின் வெளிப்படையான செயல்பாடுகளும் அணுகுமுறையும் எனக்கு எப்போதும் பிடிக்கும். எல்லோருக்கும் நல்லது செய்யும் முதல்வர் "தலைவா' பட பிரச்னையிலும் தலையிட்டு, விரைவில் தமிழகம் முழுவதும் "தலைவா' படம் வெளிவர ஆவண செய்வார்கள். அதுவரை என்னை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகர்களும் பொறுமையோடு காத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அந்த செய்திக் குறிப்பில் விஜய் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலி: மக்கள் அச்சம்

தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு முதல்வர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்? டிடிவி தினகரன்
உயர்கல்வி தேர்வு! விழிப்புணர்வின்மை, தெளிவின்மை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


