/

போலீஸ் அனுமதியின்றி சென்ற 2 வேன் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே சிக்கலில் தமிழக முன்னேற்ற கழக பொது செயலர் கணேச பாண்டியன் மனைவு நினைவு நாள் நிகழ்ச்சிக்கு, வாடகை வாகனங்களில் யாரையும் ஏற்றிச் செல்லக்கூடாது

Updated On :11 ஆகஸ்ட் 2013, 6:20 pm IST

போலீஸ் அனுமதி பெறாமல் வேன்களை ஏற்றி்ச சென்ற சம்பவத்தி்ல 2 ஓட்டுனர்களை, போலீஸார், கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே சிக்கலில் தமிழக முன்னேற்ற கழக பொது செயலர் கணேச பாண்டியன் மனைவு நினைவு நாள் நிகழ்ச்சிக்கு, வாடகை வாகனங்களில் யாரையும் ஏற்றிச் செல்லக்கூடாது என்று போலீஸார் தடை விதித்திருந்தனர். ஆனால் வடக்கு மல்லல் என்ற ஊரைச் சேர்ந்த உலகம்மாள் என்பவரது வேனில் சிக்கலுக்கு ஆட்களை, வேன் ஓட்டுனர் முனியாண்டி மகன் பால்பாண்டி ஏற்றிச் சென்றாராம்.  இதே போன்று முதுகுளத்தூர்-மீனாட்சிபுரத்தை சேர்ந்த பிரபாகர் மகன் ஓட்டுனர் பாபு, சிலரை வேனில் சிக்கலுக்கு ஏற்றிச்சென்றாராம்.

போலீஸ் அனுமதி பெறாமலும், சாதி ஒற்றுமைக்கு பாதகம் விளைவிக்கும் வகையிலும், வாகன சட்ட விதிமுறைகளை மீறியும் வேன் ஓட்டிச் சென்றதாக இருவரையும் கைது செய்யும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.என். மயில் வாகணன் உத்தரவிட்டார். இதையடுத்து ஓட்டுனர் பால்பாண்டியை ஏர்வாடி தருகா காவல் நிலைய ஆய்வாளர் முத்து ராஜாவும், பாபுவை முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் ஜேசுவும் கைது செய்தனர். இருவரும் முதுகுளத்தூர் மற் றும் ராமநாதபுரம் ஆகிய நீதி மன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டு, 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.