தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது!சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்
/

நாசிக்கில் சுங்க சாவடிகளைத் தாக்கி எம்.எல்.ஏ.க்கள் இருவர் அட்டகாசம்

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், சுங்கச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர் எம்.எல்.ஏ.க்கள் இருவர். இவர்களின் செயல் அங்குள்ள கேமிராவில் பதிவாகியுள்ளது.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 3:31 pm IST

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், சுங்கச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர் எம்.எல்.ஏ.க்கள் இருவர். இவர்களின் செயல் அங்குள்ள கேமிராவில் பதிவாகியுள்ளது.

பிம்பால்கான் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசேனை எம்.எல்.ஏ., அனில் கதம், நாசிக்கில் தான் எம்.எல்.ஏ., என்றும் கட்டணம் அளிக்க முடியாது என்றும் கூறி, சாவடியில் இருந்த கணினியை அடித்து சேதப்படுத்தினாராம்.

காங்கிரஸ் தயவுடன் வெற்றி பெற்ற சந்த்வாத் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ., சிரிஷ்குமார் கோட்வால், அங்குள்ள உள்ளூர் விவசாயிகளின் டிராக்டர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளபோதிலும், சுங்கச் சாவடியில் அவர்களிடம் வசூலித்தார்கள் என்று கூறி, ஒரு சாவடியையே அடித்து நொறுக்கினாராம். அந்தச் சாவடி பெண்களாலேயே நிர்வகிக்கப்பட்டு வருவது. இதுவும் காமிராவில் பதிவாகி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.