காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் செல்கிறார். ஞாயிற்றுக்கிழமை கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், மருத்துவ சோதனைக்காக சோனியா காந்தி அமெரிக்காவுக்குச் செல்கிறார் என்று தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 2011ல் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற அவர் அமெரிக்காவுக்குச் சென்றார். பின்னர் பிப்ரவரி மற்றும் செப்டம்பர் என சென்ற வருடத்தில் இரண்டு முறை அமெரிக்காவுக்குச் சென்று உடல் பரிசோதனைகளை மேற்கொண்டார்.
இந்நிலையில், ஆக.26ம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற சோனியா, பேச்சை முடித்துக் கொண்ட போது, உடல் நலக் குறவால் அவதிப்பட்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் அவர் இன்று அமெரிக்காவுக்கு மருத்துவ பரிசோதனைக்காக செல்லவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








