இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

தந்தை பெரியார் பிறந்த நாள் : ஜெயலலிதா மலர் தூவி மரியாதை

தந்தை பெரியாரின் 135வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 12:18 pm IST

தந்தை பெரியாரின் 135வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 135-ஆவது பிறந்த நாளான 17.9.2013 செவ்வாய்க் கிழமை அன்று காலை 11 மணி அளவில், சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள் என்று அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.