மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

10ம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் : 221 விடைத்தாள்கள் காணவில்லை

விழுப்புரம் அருகே 221 மாணவர்களின் 10ம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் விடைத்தாள்களைக் காணவில்லை.

Updated On :2 ஏப்ரல் 2013, 6:30 am

விழுப்புரம் அருகே 221 மாணவர்களின் 10ம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் விடைத்தாள்களைக் காணவில்லை.

10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், நடந்து முடிந்த ஆங்கிலம் முதல் தாள் தேர்வில், சத்தியமங்கலத்தில் ஒரு பள்ளியில் இருந்து திண்டிவனத்துக்கு அனுப்பப்பட்ட விடைத்தாள்களில், 221 விடைத்தாள்களை மட்டும் காணவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 25 மாணவர்கள், மேல்பாப்பாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 176 பேர், தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 20 பேர் என மொத்தம்  221 பேர் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதினர்.

தேர்வு முடிந்ததும், சத்தியமங்கலம் போஸ்ட் ஆபிஸில் விடைத்தாள்கள் கொடுத்தனுப்பபப்பட்டு, அவைகள் திண்டிவனம் வந்து அங்கிருந்து ரயிலில் திருச்சிக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. சத்தியமங்கலம் போஸ்ட் ஆபிஸில் இருந்து தபால் ஊழியர் விடைத்தாளைக் எடுத்துக்கொண்டு செஞ்சியில் இருந்து தனியார் பேருந்து மூலமாக திண்டிவனம் கொண்டு வரும் வழியில் 221 விடைத்தாள்கள் காணாமல் போயுள்ளன. இதையடுத்து அவர் சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விடைத்தாள்கள் காணாமல் போனது குறித்து துணை ஆட்சியர் மீனா பிரியதர்ஷினி, வட்டாட்சியர் ஜெயக்குமார் ஆகியோரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடலூரில் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள்கள் சேதமடைந்ததை அடுத்து இன்று மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது மாணவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.