மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

2-வது திருமணம் செய்து கொண்ட கணவர் மீது ஆசிரியை புகார்

2-வது திருமணம் செய்து கொண்ட கணவர், திருமணம் செய்து கொண்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி ஆசிரியை எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.

News image
Updated On :9 ஏப்ரல் 2013, 3:29 pm

விஜயக்குமார்

2-வது திருமணம் செய்து கொண்ட கணவர், திருமணம் செய்து கொண்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி ஆசிரியை எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.

சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் நளினி, கடலூர் மாவட்ட எஸ்.பி.யிடம் செவ்வாய்க்கிழமை கொடுத்த புகார் மனு:

தனது கணவர் உதயகுமார் இப்போது கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் எனக்கும் கடந்த 1983-ம் ஆண்டு மேல்மருவத்தூர் கோயிலில் திருமணம் நடந்தது.

கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் பதிவு செய்யப்பட்டது.

ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். கடந்த 2000-ம் ஆண்டு வரை என்னுடன் வாழ்ந்த கணவர் உதயகுமார், இதன்பிறகு இடமாறுதல் வாங்கி கடலூர் மாவட்டத்துக்கு வந்துவிட்டார். இதன்பிறகு வீட்டுக்கு வருவதையும் படிப்படியாக குறைத்துக் கொண்டார்.

சில ஆண்டுகளாக வீட்டுக்கே வரவில்லை. இந்நிலையில் கடந்த 1993-ம் ஆண்டில் கடலூரைச் சேர்ந்த ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், அவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும், அவர் கல்லூரியில் படிப்பதாகவும் அண்மையில் தெரியவந்தது.

இது குறித்து கணவரிடம் கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார்.

மாற்றுத்திறனாளியான என் மகனை வைத்துக் கொண்டு மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில், குடும்பத்தை கவனிக்காமல் வேறொரு திருமணம் செய்துள்ள கணவர் உதயகுமார் மற்றும் அவரை திருமணம் செய்துள்ள பெண் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ÷மேலும் கணவருக்கு குடும்பத்தை கவனிக்க அறிவுரை வழங்கவேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.