புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஈரோட்டில் கூட்டுறவுத் தேர்தல் பிரச்னை: சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு அருகே வில்லரசம்பட்டி நால் ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டவர்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :9 ஏப்ரல் 2013, 6:44 am

ஜபலின் ஜான்

ஈரோடு அருகே வில்லரசம்பட்டி நால் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  செங்கோடம்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நலச் சங்கம் சார்பில் இன்று வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. இதில்,  11 பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர். 146 பேர் ஓட்டு போடலாம்.

இன்று காலை வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இவர்களில் முதல் 24 பேருக்கு மட்டுமே வேட்பு மனு கொடுப்பார்கள் என்பதால், கூட்டம் அதிகமாக இருந்தது. இருப்பினும், அதிமுகவினர் தங்கள் தரப்பில் இருந்து 300 பேரை வரிசையில் நிற்க வைத்து விட்டார்கள் என்பதால், மற்றவர்கள் எவரும் மனு வாங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள், வில்லரசம்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.