எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வீரவநல்லூர் கூட்டுறவு வங்கி தேர்தலில் 11 பேர் வெற்றி

வீரவநல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 31 பேர் போட்டியிட்டனர். இதில் 11 பேர் வெற்றி பெற்றதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :23 ஏப்ரல் 2013, 5:06 pm

ஷேக் அப்துல்காதர்

வீரவநல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 31 பேர் போட்டியிட்டனர். இதில் 11 பேர் வெற்றி பெற்றதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

வீரவநல்லூர் டி.ஏ. 16 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிக்கு 11 பேர் தேர்வு செய்ய வேண்டிய நிலையில் 31 பேர் போட்டியிட்டனர். இதையடுத்து கடந்த 19 ம் தேதி (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. மொத்த வாக்காளர்கள் 4174. இதில் 1425 வாக்குகள் பதிவானது.

செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 216 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு: அடைப்பு குறிக்குள் வேட்பாளர் பெற்ற வாக்குகள். ஆர். ஆதிஜெயலட்சுமி (321), சு. மாரி (266), அமுதா (215), ஆர். பாடகலிங்கம் (169),

சு. சீவலக்கண்ணு (165), ப. குமார் (438), சு. தெய்வநாயகம் (438), சந்தனக்குமார் (332), சங்கர் (315), இளையராஜா (278), சந்தானம் (233) ஆகியோர் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் ஆர். நாகராஜன் அறிவித்தார். தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இம்மாதம் 30 ம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.