தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருத்தேரை வடம்பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார். கீழரதவீதியிலிருந்து தொடங்கி தெற்கு ரதவீதி, மேற்குரதவீதி, வடக்குரதவீதி வழியாக சென்ற தேர் பகல் ஒரு மணிக்கு நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தையொட்டி, தேருக்கு முன்னால் யானைகள், ஒட்டகங்கள், நாட்டியக் குதிரைகளின் அணிவகுப்பு, கிளாரினெட், நையாண்டி மேளம், களியல் ஆட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம், சென்டை மேள கலைஞர்களின் அணிவகுப்புகள் ஆகியவை நடைபெற்றன. இதில், பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ சிவ, அரகர மகாதேவா என்ற மந்திரங்களை எழுப்பினர்.