லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை தீவிபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர்கள் 2 பேர் சாவு

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் மராமத்து பணியின் போது கரிமருந்து உராய்வினால் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க் கிழமை நள்ளிரவில்  உயிரிழந்தனர்.

Updated On :24 ஏப்ரல் 2013, 9:19 am

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் மராமத்து பணியின் போது கரிமருந்து உராய்வினால் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க் கிழமை நள்ளிரவில்  உயிரிழந்தனர்.

விருதுநகர் அருகே உள்ள குந்தலப்பட்டிக்கும் - செங்குன்றாபுரத்துக்கும் இடையே கரிசல்காட்டு பகுதியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கடந்த 20-ம் தேதி அன்று   மராமத்து பணிகள் நடந்தது. இதையொட்டி பட்டாசு தயார் செய்யப்படும் அறைகளின் தரைப்பகுதி கடப்பாறை கம்பியால் இடிக்கும் பணியில் தொழிலாளிகள் மும்முரமாக ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தரைப்பகுதியில் இருந்த கரிமருந்து உராய்வு ஏற்பட்டு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதில், இடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த முத்துலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(32) மற்றும் சிவகாசி அண்ணா நகரைச் சேர்ந்த கருப்பசாமி(22) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  முதலுதவி சிகி்சசை அளிக்கப்பட்டது. அதையடுத்து, அவசரமாக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆமத்தூரைச் சேர்ந்த ஆலையின் உரிமையாளர் தங்கராஜ், அதே பகுதியைச் சேர்ந்த  மேலாளர் சிவகுமார் ஆகியோர் மீது ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.