சித்ரா பௌர்ணமி விழா : திருவண்ணாமலையில் குவிந்துள்ள பக்தர்கள்
சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.


சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் பௌர்ணமி மாத கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதிலும், சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் வந்தால்
ஆண்டு முழுவதும் கிரிவலம் வந்ததற்கான பலன் கிடைக்கும் என்பதால், இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அருணாச்சலேஸ்வரரைக் காண ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
ஏராளமானோர் 14 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து கொண்டிருக்கின்றனர். வேலூர் சரக டிஐஜி தலைமையில் திருவண்ணாமலையில் சுமார் 3000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் சுமார் 3000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...