டிராக்டரில் இருந்து விழுந்த சிறுவன் சாவு
திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் விளை நிலத்தில் பொழி உழவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தான்.


திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் விளை நிலத்தில் பொழி உழவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தான்.
ஆழ்வார்குறிச்சி வள்ளுவர்நகரை சேர்ந்த அருணா மகன் அஜய் (6). சிறுவனின் தாய், தந்தை இருவரும் இறந்து விட்டனர். அங்குள்ள பள்ளியில் அஜய் 1 ம் வகுப்பு படித்து வந்தார். அஜய் தாத்தா பராமரிப்பில் இருந்து வந்தார்.
நேற்று வள்ளுவர் நகரை அடுத்துள்ள விளை நிலங்களில் நடுகைக்காக
விவசாயிகள் டிராக்டர் மூலம் பொழி உழவு பணியினை மேற்கொண்டனர்.
அப்போது உழவு பணியில் ஈடுபடுத்தப்பட்ட டிராக்டரில் ஒன்றில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அஜய் தவறி விழுந்ததில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலே இறந்தார். இது குறித்து
ஆழ்வார்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...