லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

கிராமங்களில் மேல்நிலை குடிநீர் தொட்டிகளை 15 நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய ஆட்சியர் கட்டளை

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குடிநீர் மேல் நிலை தொட்டிகளை 15 நாள்களுக்கு ஒரு முறை குளோரினேசன் செய்து சுத்தம் செய்ய வேண்டும் என அதிகாரிகளை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.

Updated On :30 ஏப்ரல் 2013, 2:44 pm

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குடிநீர் மேல் நிலை தொட்டிகளை 15 நாள்களுக்கு ஒரு முறை குளோரினேசன் செய்து சுத்தம் செய்ய வேண்டும் என அதிகாரிகளை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.

விருதுநகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து பேசியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் இல்லையென்ற நிலையை உருவாக்க வேண்டும். அதற்காக சுகாதார பணியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கழிவு நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதேபோல், சுற்றுப்பகுதியில் டயர், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் பொருள்கள், உடைந்த குடங்கள், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்கள் ஆகியவைகளை சாலைகளில் மற்றும் பொது இடங்களில் போடுவதை தடுக்க வேண்டும். தற்போது கோடைக்காலமாக இருப்பதால் வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் குடங்கள், சிமெண்ட் தொட்டிகள், டிரம்கள் ஆகியவைகளில் கொசுக்கள் புகாமல் துணியால் மூடிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அனைத்து மேல் நிலை குடிநீர் தொட்டிகளையும் 15 நாள்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து, குளோரினேசன் செய்வது அவசியம் ஆகும். தங்கள் பகுதிகளில் உள்ள கு்பபைகள் மற்றும் கூளங்களை சுத்தம் செய்து சுற்றுப்புற சூழலை சுகாதாரமாக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளாட்சி துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட திட்ட இயக்குநர் பிரபாகர், துணை சுகாதார இயக்குநர் வரதராஜன், மகளிர் திட்ட அலுவலர் குருநாதன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பழனியாண்டி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரி கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.