சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலை பிடிபட்டது: முதலைகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி வாய்க்காலிலிருந்து 9 அடி நீளமுள்ள 550 கிலோ எடை கொண்ட பெரிய முதலை ஒன்று வியாழக்கிழமை நள்ளிரவு வெளியேறி நாஞ்சலூர் கிராமத்தின்


சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து முதலைகள் ஊருக்குள் புகுந்து மனித உயிர்கள் மற்றும் கால்நடைகளை கடித்து குதறுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி வாய்க்காலிலிருந்து 9 அடி நீளமுள்ள 550 கிலோ எடை கொண்ட பெரிய முதலை ஒன்று வியாழக்கிழமை நள்ளிரவு வெளியேறி நாஞ்சலூர் கிராமத்தின் மெயின்ரோட்டிற்கு வந்தது. இதனை பார்த்த ஊர்மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் சம்பவ இடத்திற்கு சென்று ஊர்மக்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் முதலையை பிடித்து கட்டிக்போட்டு அண்ணாமலைநகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த வனக்காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார், டி.பழனிவேல் ஆகியோர் சென்று பிடிபட்ட முதலையை பெற்று அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் கொண்டு விட்டனர்.
சிதம்பரம் பகுதியில் ஜூலை 4-ம் தேதி இளநாங்கூர் கிராமத்திற்குள் முதலை ஒன்று புகுந்து விவசாயி ஐயப்பன் வீட்டின் பின்புறமுள்ள மாட்டுக்கொட்டகையிலிருந்து ஆட்டினை விழுங்கியது. அம்முதலையை ஊர்மக்கள் கட்டுப்போட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஜூலை 8-ம் தேதி சித்தலாப்பாடி கிராமத்தில் உப்பானாற்றில் லோகநாதன் என்பவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வலையில் சிக்கிய முதலைகுட்டியை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். ஜூலை 28-ம் தேதி சிதம்பரம் அருகே பெராம்பட்டு ரயிலடி பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி ஜோதிராஜன் (55) பழைய கொள்ளிடம் ஆற்றில் இறங்கிய போது முதலை கடித்து இழுத்துச் சென்று இறந்தார். பழைய கொள்ளிடம், வக்காரமாரி உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் இல்லாததால் முதலைகள் அருகாமையில் உள்ள ஊர்களுக்குள் புகுந்து மனித உயிர்களுக்கும், கால்நடைகளையும் தீங்கு விளைவித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் நீர்நிலைகளில் இறங்கி குளிக்க அச்சப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தது: கடந்த சில ஆண்டுகளில் மட்டும், பழைய கொள்ளிடம் பகுதியில் 11-க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் முதலைகளுக்கு இரையாகி உள்ளனர். அதுபோன்று மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் முதலைகளின் இழுத்துச் செல்லப்பட்டு இறந்துள்ளன. இந்த ஆபத்திலிருந்து பொதுமக்களையும், கால்நடைகளையும் பாதுகாத்திடும் வகையில் மேற்கண்ட முதலைகளை பிடித்து வேறு இடத்தில் கொண்டு விட வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் வனத்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் உயிரிழப்புகள் தொடர் கதையாகி வருகின்றன. எனவே முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி, பழைய கொள்ளிடம் ஆற்றில் உள்ள முதலைகளை பிடித்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...