மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெரியாறு பிரதான கால்வாயில் மூழ்கி பிளஸ் டூ மாணவன் சாவு

பெரியாறு பிரதானக் கால்வாய் கள்ளந்திரி மதகு அருகே நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த பிளஸ் டூ மாணவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு சனிக்கிழமை இறந்தார்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2013, 5:41 pm

தர்மராஜ்

பெரியாறு பிரதானக் கால்வாய் கள்ளந்திரி மதகு அருகே நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த பிளஸ் டூ மாணவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு சனிக்கிழமை இறந்தார்.

மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் நகைக்கடை உரிமையாளர் சந்திரசேகர். இவரது மகன் பவித்திரன் (17). பிளஸ் டூ மாணவரான இவர், நண்பர்களுடன் கள்ளந்திரி பெரியாறு பிரதானக் கால்வாயில் குளிக்க வந்திருந்தார். அப்போது கால்வாய் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கினார். இவரது சடலத்தை நீண்டநேரம்தேடி தீயணைப்புப் படையினர் மீட்டனர்.

இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அபாய அறிவிப்பு வேண்டும்

பிரதான கால்வாயில் குளிப்பதற்காக மதுரையிலிருந்து ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் கள்ளந்திரிக்கு விடுமுறைநாள்களில் வருகின்றனர். பெரும்பாலோனோருக்கு நீச்சல் தெரிவதில்லை. இந்நிலையில், கால்வாயில் நீரின் வேகமும் அதிகம். இதனால் நீரில் இழுத்துச் செல்லப்படுவோர் 9-வது பிரிவு கால்வாயில் சுழலில் சிக்கி இறக்க நேரிடுகிறது.

இதுதொடர்பாக எவ்விதமான எச்சரிக்கைப் பலகையும் ஆற்றங்கரையில் வைக்கப்படவில்லை. பொதுப்பணித்துறையினர் கால்வாய் கரையில் எச்சரிக்கை பலகை வைக்கவேண்டும். அல்லது ஆற்றில் பிரதான கால்வாயில் குளிக்கத் தடைவிதிக்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். கடந்த ஆண்டில் 7 பேர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.