/

மாணவியர்களிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் தற்காலிக வேலைநீக்கம்

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஜி.மோகன் (50). இவர் ஆக.2-ம் தேதி பொறியியல் புலத்தில் 2-ம் ஆண்டு பயிலும் இருமாணவியர்களை அறைக்கு

News image
Updated On :5 ஆகஸ்ட் 2013, 9:59 am

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் மாணவியர்களிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியரை பல்கலைக்கழக நிர்வாகம் தற்காலிக வேலைநீக்கம் செய்துள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஜி.மோகன் (50). இவர் ஆக.2-ம் தேதி பொறியியல் புலத்தில் 2-ம் ஆண்டு பயிலும் இருமாணவியர்களை அறைக்கு அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியர்கள் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் பேராசிரியர் ஜி.மோகன் மீது மகளிர் வன் கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில் பேராசிரியர் ஜி.மோகசனை தற்காலிக பணிநீக்கம் செய்து பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் நிர்வாக ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.