/

இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு

கடலூர் மாவட்டம் சோழத்தரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆனந்தபாபு. இவர் தற்போது சென்னையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். 2005-ம் ஆண்டு சோழத்தரம் காவல்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2013, 2:08 pm

G.Sundararaj

இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு காட்டுமன்னார்கோயில் நீதிமன்றம் இன்று பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடலூர் மாவட்டம் சோழத்தரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆனந்தபாபு. இவர் தற்போது சென்னையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். 2005-ம் ஆண்டு சோழத்தரம் காவல் நிலைய எல்லையில் உள்ள அறந்தாங்கியில் கோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல் குறித்து வழக்குப் பதிவு செய்தார். இவ்வழக்கு விசாரணை காட்டுமன்னார்கோயில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் 25-7-2009ல் ஆனந்தபாபு ஆஜரானார். அதன் பின்னர் வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்று காட்டுமன்னார்கோயில் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபுவை 28-7-2013க்குள் ஆஜர்படுத்துமாறு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.