/

சிதம்பரம் தில்லைக்காளிக்கும் மகாபிஷேகம்!

சிதம்பரம் எல்லையில் குடிகொண்டுள்ள பிரசித்த பெற்ற ஸ்ரீதில்லைக்காளியம்மனுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு மகாபிஷேகமும், சிறப்பு அர்த்தசாம பூஜையும் வெகு சிறப்பாக

News image
Updated On :7 ஆகஸ்ட் 2013, 11:41 am

G.Sundararaj

பிரசித்தி பெற்ற சிதம்பரம் தில்லைக்காளியம்மனுக்கு மகாபிஷேகம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

சிதம்பரம் எல்லையில் குடிகொண்டுள்ள பிரசித்த பெற்ற ஸ்ரீதில்லைக்காளியம்மனுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு மகாபிஷேகமும், சிறப்பு அர்த்தசாம பூஜையும் வெகு சிறப்பாக நடைபெற்றது.  ஸ்ரீவிநாயகருக்கு நெய் தீப ஆராதனை வழிபாடும், ஸ்ரீபிரம்மசாமுண்டிக்கு தயிர், பால், சந்தனம், தேன், திரவியப்பொடி ஆகியவற்றால் அபிஷேகமும், ஸ்ரீதில்லைக்காளிக்கும் குடம், குடமாக நல்லெண்ணெய் அபிஷேகமும், தைலக்காப்பு, குங்குமக் காப்பு செய்யப்பட்டது. பின்னர்  வாசனை திரவியங்கள் மற்றும் வெண்பட்டு சாற்றப்பட்டு வெட்டிவேல், விலாமுச்சு வேர்களால் ஆன சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஸ்ரீதில்லைக்காளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று மகாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.

அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் ராகுகாலத்தில் தீபம் ஏற்றி காளியை வழிபட்டால் தீராத கடன், பகைவர்கள் தொந்தரவு, பூர்வஜென்ம சாப தோஷங்கள் தீரும், சித்தம் தெளியும் என்பது ஐதீகமாகும். மகாபிஷேகம் மற்றும் சிறப்பு அர்த்தசாம பூஜைக்கான ஏற்பாடுகளை அமாவாசை அர்த்தசாம அபிஷேக மண்டலி ஒருங்கிணைப்பாளர் எஸ்.வைத்தியநாதன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.