தந்தையை மிரட்டிய மகன்கள் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சொத்து தகராறில் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன்களை போலீஸார் கைது செய்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சொத்து தகராறில் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன்களை போலீஸார் கைது செய்தனர்.
பர்கூர் அருகே அங்கிநாயனப்பள்ளியை அடுத்துள்ள பிக்கானூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி குட்டி என்கிற சின்னப்பாநாயுடு(70). இவரது மகன்கள் திம்மராயன்(45) மற்றும் முனியப்பன்(35). இவர்கள் தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.
குட்டி தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை மகன்கள் இருவருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார். வீட்டை மட்டும் தனது பெயரில் வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முனியப்பன், வீட்டையும் பிரித்துக் கொடுக்குமாறு கேட்டனராம். இதற்கு குட்டி மறுத்ததால் தந்தை, மகன் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம்.
அப்போது முனியப்பன், தந்தையை கத்தியை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து குட்டி பர்கூர் போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து முனியப்பன் மற்றும் திம்மராயன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...