ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பொதுமக்களின் புகார்கள் குறித்து துரித நடவடிக்கை எடுக்கப்படும்: தூத்துக்குடி புதிய ஆட்சியர் எம். ரவிக்குமார் பேட்டி

பொதுமக்களின் புகார்கள் குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய

News image
Updated On :8 ஆகஸ்ட் 2013, 10:31 am

INBARAJ

பொதுமக்களின் புகார்கள் குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட எம். ரவிக்குமார்.

 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ஆஷிஷ்குமார் சென்னை சமூகநலத் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த எம். ரவிக்குமார் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

 இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் 23-வது ஆட்சியராக எம். ரவிக்குமார்(55) இன்று (வியாழக்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்து பொறுப்புகளை ஒப்படைத்தார்.

புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட எம். ரவிக்குமார் அளித்த பேட்டி:

 2012-ல் ஆட்சிப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு கடலூர் மற்றும் திருவள்ளூரில் உதவி ஆட்சியராகவும், பின்னர் கடந்த 5 மாதங்களாக அரியலூர் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளேன். 1981 முதல் 1986-ம் ஆண்டு வரை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றியுள்ளேன். தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.

 சாமானிய மக்களின் பிரச்னைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.  ஒழிவு மறைவு இல்லாத ஆடம்பரம் இல்லாத நேர்மையான முறையில் நிர்வாகம் நடைபெறும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் குறித்து துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பிரச்னைகளுக்கு முடிவு காணப்படும் என்றார்.

 புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆட்சியர் எம். ரவிக்குமார் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.