உடல்நலக்குறைவால் பீகார் தொழிலாளி பலி
பழனி அருகே கோழிப்பண்ணையில் வேலை பார்த்த பீகார் மாநில தொழிலாளி உடல்நலக்குறைவால் இறந்து போனார்.


பழனி அருகே கோழிப்பண்ணையில் வேலை பார்த்த பீகார் மாநில தொழிலாளி உடல்நலக்குறைவால் இறந்து போனார்.
பழனி அருகே மரிச்சிலம்பு கிராமத்தில் மணிபிராய்லர்ஸின் முட்டைப்பண்ணை, கோழிக்குஞ்சு உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த சிலகாலம் முன்பு இங்கு கோழி இறைச்சிகளை எரிப்பதால் ஏற்படும் மாசுக்கேடால் பலருக்கு நோய் ஏற்படுவதாகவும், கோழி இறகுகளால் சுற்றுச்சூழல் கேடு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் இங்கு வேலை பார்க்கும் பீகார் மாநிலம் துர்காலியாவை சேர்ந்த பூரான்மான்ரி(43) என்பவர் உடல்நலக் குறைவால் கடந்த ஒருவார காலம் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை அவர் இறந்து போனார். இதுகுறித்து அவரது மனைவி துலாரிதேவி மேஸ்திரி சுனில்தானியிடம் தெரிவித்தார். இவர் மரிச்சிலம்பு கிராம நிர்வாக அலுவலர் பாக்கியலட்சுமியிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...