மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரம் குளங்கள் தூர்வாரும் பணிக்கான தடை நீங்கியது: தூர்வார முதல்வர் தனிப்பிரிவு அனுமதி

சிதம்பரத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர வழிவகுக்கும் வகையில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் நகரில் உள்ள 12 குளங்களை தூர்வாரும் பணியில் இறங்கினர். முதல் கட்டமாக நகராட்சி நிர்வாகம் மற்றும்

News image
Updated On :14 ஆகஸ்ட் 2013, 2:26 pm

G.Sundararaj

சிதம்பரம் நகரில் குளங்கள் தூர்வாரும் பணிக்கு உதவிஆட்சியர் (பொறுப்பு) அளித்த தடை நீங்கியது. முதல்வரின் தனிப்பிரிவு குளங்களை தூர்வார அனுமதி வழங்கியுள்ளது.

சிதம்பரத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர வழிவகுக்கும் வகையில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் நகரில் உள்ள 12 குளங்களை தூர்வாரும் பணியில் இறங்கினர். முதல் கட்டமாக நகராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் நகரில் உள்ள அண்ணாகுளம், யானைகுளம், ஓமக்குளம், இளமையாக்கினார் கோயில் குளம், தில்லையம்மன்கோயில் குளம் ஆகியவற்றை தூர்வாரும் பணியில் இறங்கினர். இதற்கு தொண்டு நிறுவனங்கள், சமூகஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டு ஆதரவாக பணியில் ஈடுபட முன்வந்தனர்.

இந்நிலையில் ஆக.3-ம் தேதி உதவிஆட்சியர் (பொறுப்பு) பாதாளம், குளம் தூர்வாரும் பணியை நிறுத்த உத்தரவிட்டார். இதனால் 90 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கப்பட்டு நகரில் உள்ள குளங்களை தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது. எனவே தூர்வாரும் பணியை மீண்டும் தொடர அனுமதி வழங்க வேண்டும் எனக்கோரி இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினர். இதனையடுத்து சிதம்பரம் ஓமக்குளத்தை தூர்வார அனுமதி வழங்கி முதல்வரின் தனிப்பிரிவினர் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். குளங்களை தூர்வாரியும் அழகுபடுத்தவும் அனுமதி வழங்கி உதத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.