அருப்புக்கோட்டையில் நடந்த சென்ற பேராசிரியையிடம் 6 சவரன் நகையை பறித்து கொண்டு பைக்கில் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கம் நகரில் ஜவஹர் தெருவைச் சேர்ந்த ராஜபாண்டி. இவர் துபையில் பணியிலிருந்து வருகிறார். இவரது மனைவி விமலாதேவி(41) இங்குள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டிலிருந்து கடைவீதிக்கு பொருள்கள் வாங்குவதற்காக தனது மகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, எதிரே பைக்கில் வந்த மர்ம நபர்கள் விமலாதேவியின் கழுத்தில் கிடந்த 6 சவரன் தாலிச்செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார்களாம்.
இது தொடர்பாக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் விமலாதேவி புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பைக்கில் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
தொகுதி நிலவரம்- சேலம் மேற்கு! நான்குமுனைப் போட்டியால் விசிலடிக்கும் வேட்பாளா்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

