அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

கல்லூரிகளில் அறிவியல் பாடங்களை எடுத்து படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது

அறிவியல் பாடங்களை கல்லூரிகளில் எடுத்து படித்து வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக காமராஜர் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை தலைவர் பிச்சுமணி தெரிவித்தார்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2013, 3:34 pm

அறிவியல் பாடங்களை கல்லூரிகளில் எடுத்து படித்து வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக காமராஜர் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை தலைவர் பிச்சுமணி தெரிவித்தார்.    

 
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை தொடங்கி மூன்று நாளுக்கு நடைபெற இருக்கிறது. இதன் தொடக்க விழாவிற்கு தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். வேதியியல் துறை தலைவர் ஆர்.பூமிநாதன் வரவேற்புரை வழங்கினார்.


இதில் சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை தலைவர் கே.பிச்சுமணி முகாமை தொடங்கி வைத்து பேசினார். தற்போது, அறிவியல் பாடங்களை கல்லூரிகளில் எடுத்து படித்து வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பிளஸ்2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுப்பவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளையே விரும்புகின்றனர்.  இந்தியாவிலேயே ஆராய்ச்சி மேற்கொண்டு நோபல் பரிசு பெற்ற ராமனுக்கு பிறகு இப்பரிசு பெற மாணவ, மாணவிகள் அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வத்துடன் ஈடுபட முன்வர வேண்டும்.
அதேபோல் உயர் கல்வி படித்து வருகிறவர்களுக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளை அளித்து வருகிறது. இதுபோன்ற வாய்ப்புகளையும் வசதிகளையும் முழுமையாக பயன்படுத்தும் பொழுது இந்திய ஆராய்ச்சிகள்  அனைத்தும் வருவாய் ஈட்டக்கூடிய சூழ்நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளதாக பேராசிரியர் பிச்சுமணி தெரிவித்தார்.   


இப்பயிற்சி முகாமில் விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும், கல்லூரி முதல்வர் சுந்தரபாண்டியன், சுயநிதிப்பாட பிரிவு இயக்குநர் அசோக்குமார், ஆராய்ச்சி டீன் பேராசிரியர் பிரிதிவிக்குமரன் உள்ளிட்டோர் அறிவியலின் முக்கியத்துவம் குறித்து பேசினார்கள். நிகழ்ச்சியின் நிறைவாக வேதியியல் துறை தலைவர் ராமன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை செந்திக்குமார நாடார் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.