ஈரோடு: வீட்டில் சிலிண்டர் வெடித்து தாய்-மகள் பலி
ஈரோடு வளையக்கார வீதியில் வசிப்பவர் வரதராஜ் (45). இவருக்குச் சொந்தமாக அதே வளாகத்தில் 16 வீடுகள் உள்ளன. அவ


ஈரோட்டில் சிலிண்டர் வெடித்து தாய்-மகள் பலியாயினர்.
ஈரோடு வளையக்கார வீதியில் வசிப்பவர் வரதராஜ் (45). இவருக்குச் சொந்தமாக அதே வளாகத்தில் 16 வீடுகள் உள்ளன. அவற்றில் ஒரு வீட்டில் இவரது தாயார் சரஸ்வதி (85) மற்றும் கணவனை விட்டுப் பிரிந்து வாழும் இவரது அக்கா மகாலட்சுமி (50) இருவரும் ஒரு வீட்டில் வசித்தனர்.
இன்று காலை, சரஸ்வதி வீட்டில் இருந்து புகை வந்ததைக் கண்ட வரதராஜ், கதவைத் தட்டி உடைத்து உள்ளே சென்றார். அப்போது, கேஸ் சிலிண்டர் வெடித்து இருவரும் இறந்தது தெரியவந்தது. வரதராஜ் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தால், இந்த வீட்டை அடுத்த 2 வீடுகளில் பொருள்கள் சேதம் அடைந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...