நாட்டை ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று பாஜக மாநில துணைத் தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் மத்திய மாநில அரசின் மக்கள் விரோதப் போக்கினால் விலைவாசி உயர்வு, அன்னிய செலவானி வீழ்ச்சி, ஆடிட்டர் ரமேஷ் படுகொலை ஆகியவற்றை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று புதன்கிழமை இரவு கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பாஜக மாநிலத் துணைத் தலைவர் எச்.ராஜா பேசினார். அவர் பேசியதாவது:
மத்தியில் காங்கிரஸ் அரசு செயல்படாத அரசாக உள்ளது. பொருளாதாரத்தை பாதுகாக்க தவறிவிட்டனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. பணவீக்கம் அதிகரித்து விட்டது. அனைத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நிதி அமைச்சர் சிதம்பரமும்தான் காரணம். நாட்டின் ஆன்லைன் வர்த்தகத்தினால் செல்வந்தர்கள் கொள்ளையடித்து வருகின்றனர். ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், தவறான கொள்கையால் இந்தியா கடனாளியாக ஆகிவிட்டது. நாட்டின், வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கென அனைத்து பகுதிகளிலும் சீனா மற்றும் பாகிஸ்தான் தளம் அமைத்து விட்டனர். இதனால் நாட்டின் பாதகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதற்கு சோனியா காந்திதான் முழுகாரணம். வாஜ்பாய் காலத்தில் இந்தியா பொருளாதார வளர்ச்சி அடைந்திருந்தது. விலைவாசி கட்டுக்குள் இருந்தது. பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்தியாவின் கடன் குறைக்கப்பட்டிருந்தது. தங்க நாற்கர சாலை திட்டம் போன்று நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பொக்ரைன் அணுகுண்டு வெடித்து நாம் வல்லரசு என உலகுக்கு எடுத்துரைத்தோம். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் இந்தியாவிற்கு பொருளாதார தடை விதித்தது. அமெரிக்கா 4 ஆயிரம் கோடி கடன் தர மறுத்தது. அமெரிக்கா வாழ் இந்தியரிடம் ரூபாய் 18 ஆயிரம் கோடி பெற்று நம் கடனை அடைத்தோம். பாஜக ஆட்சியில் இந்தியா வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லப்பட்டது. 9 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியா மேலும் கடனாளி ஆகி வருகிறது. வாஜ்பாய் ஆட்சியில் தங்கம் பவுன் விலை வெறும் ரூபாய் 4 ஆயிரம். தற்போது பவுன் தங்கத்தின் விலை 23 ஆயிரம். வாஜ்பாய் ஆட்சியிலிருந்து இறங்கும் போது இந்தியாவில் கையிருப்பு ரூபாய் 25 ஆயிரம் கோடியாக இருந்தது. பாஜக ஆட்சிக்கு வந்தால் எல்லைப் பிரச்சனை தீரும். தீவிரவாதம் கட்டுப்படுத்தப்படும். அன்னிய செலவானி மற்றும் பொருளாதார மற்றும் பங்கு வர்த்தகம் சீராகும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொந்தரவு கொடுத்த இளைஞரின் மண்டையை உடைத்த கயாடு லோஹர்!

திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?

நன்கொடை கையாடல் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: மாயாவதி எச்சரிக்கை!

'பிரதமர் மோடி தூங்கமாட்டார்'! காலை 6 மணிக்கு செல்போன் அழைப்பு விடுத்த டிரம்ப்!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |



