தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காமராஜர், சம்பத் சிலைகளை மறைத்து விளம்பர தட்டிகள்: காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

காமராஜர், ஈ.வி.கே.சம்பத் சிலைகளை மறைத்து விளம்பர தட்டிகள் கட்டப்பட்டுள்ளதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 9:41 am

ஜபலின் ஜான்

காமராஜர், ஈ.வி.கே.சம்பத் சிலைகளை மறைத்து விளம்பர தட்டிகள் கட்டப்பட்டுள்ளதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 அதிமுக, தேமுதிக கட்சிகளின் விளம்பர தட்டிகள் கட்டப்பட்டிருந்ததை அறிந்த காங்கிரஸ் கட்சியினர் மாநகர் மாவட்டத் தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் கூடினர்.
 தலைவர்கள் சிலைகளை மறைத்து விளம்பரத் தட்டிகள் கட்டப்பட்டுள்ளதை கண்டித்து கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்த ஈரோடு நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 விளம்பரத் தட்டிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் கூறியதால் காங்கிரஸார் கலைந்து சென்றனர்.
 இது குறித்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவி கூறியது:
 அரசியல் கட்சிகள் மட்டுமன்றி தனியார் நிறுவனங்கள், அமைப்புகளும் காமராஜர், சம்பத் சிலைகளை மறைத்து தட்டிகளை வைத்து வருகின்றனர். இது அந்த தலைவர்களை அவமதிக்கும் வகையில் உள்ளது. எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆர்ப்பாட்டம் நடத்தினோம் என்றார்.
 ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப்பிரிவு துணைத் தலைவர் முகமது அர்ஷத், இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜயபாஸ்கர், ஆட்டோ பாலன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.