கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சங்கரன்கோவிலில் சுமை ஆட்டோ மீது ரயில்மோதி ஆட்டோ ஓட்டுனர் பலி

சங்கரன்கோவில் அருகேயுள்ள பந்தப்புளி கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் குமார் (28).இவர் குடும்பத்துடன் இலவன்குளம் கிராமத்தில் வசித்து வந்தார்.சுமை ஆட்டோ ஓட்டுனரான இவர் இன்று

News image
Updated On :24 ஆகஸ்ட் 2013, 10:14 am

எம். ஈஸ்வரமூர்த்தி

சங்கரன்கோவிலில் ஆள் இல்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற சுமை ஆட்டோ மீது ரயில்மோதியதில்,ஆட்டோ ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள பந்தப்புளி கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் குமார் (28).இவர் குடும்பத்துடன் இலவன்குளம் கிராமத்தில் வசித்து வந்தார்.சுமை ஆட்டோ ஓட்டுனரான இவர் இன்று அதிகாலை 7.30 மணிக்கு இலவன்குளத்தில் இருந்து சுமை ஆட்டோவை ஓட்டிக்கொண்டு சங்கரன்கோவில் நோக்கி சென்றார்.சங்கரன்கோவிலுக்கும் இலவன்குளத்திற்கும் இடையில் உள்ள ஆள் இல்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, சென்னையில் இருந்து செங்கோட்டை நோக்கி செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ஆட்டோ மீது மோதியது.இதில் சுமை ஆட்டோ சுமார் 200 ஆடி தூரம் தூக்கி வீசப்பட்டது.அதில் இருந்த ஆட்டோ டிரைவரும் பல அடிதூரம் தனியாக தூக்கி வீசப்பட்டார்.

இதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுனர் குமார் இறந்தார்.ஆட்டோ தூக்கி வீசப்பட்டதில் அதன் மேல் போடப்பட்டிருந்த கூரைகள் பிய்த்து ஏறியப்பட்டன.ஆட்டோ பல அடிதூரம் உருண்டு பள்ளத்தில் பாய்ந்தது.விபத்தில் இறந்த குமாருக்கு பத்மாவதி(26) என்ற மனைவியும்,ஒன்றரை வயதில் கனி என்ற மகளும் உள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவத்தைத் தொடர்ந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் அரை மணி நேரம் தாமதமாக சுமார் 8 மணிக்கு சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.