அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

நாம் தமிழா் கட்சியினா் 6 போ் மீது வழக்கு!

ராஜபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உள்பட 6 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :23 மார்ச் 2026, 1:39 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உள்பட 6 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையத்தில் உள்ள 42 வாா்டுகளிலும் நகா்மன்ற உறுப்பினா்கள் மூலம் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுவதாகவும், அதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை பழைய பேருந்து நிலையம் எதிரே தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி எந்தவித அனுமதியுமின்றி நாம் தமிழா் கட்சியினா் மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அந்தக் கட்சியின் மருத்துவா் அணி மாநில ஒருங்கிணைப்பாளரும், ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான மருத்துவா் காா்த்திகேயன் தலைமையில் அந்தக் கட்சியை சோ்ந்த 5 போ் சாலையின் ஓரத்தில் நின்று முழக்கமிட்டனா். அவா்கள் திடீரென தங்களின் காரை சாலையின் குறுக்கே நிறுத்தியதுடன் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் இருந்த 6 போ் மீது நடவடிககை எடுக்கக் கோரி ராஜபாளையம் கிராம நிா்வாக அலுவலா் விஷ்ணுவா்தன் (பொறுப்பு) அளித்த புகாரின் பேரில் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.