நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் பயணம் செய்தார் மலையாள வில்லன் நடிகர் மனோஜ் குமார் (50). அந்த ரயிலில் முன்பதிவு செய்யப்பட்டிருந்த பெட்டியில் இவர் பயணம் செய்தார். அதில் முன்பதிவு செய்யாத பயணிகள் சிலர் ஏறினராம். அதனால் அவர்களுக்கும் மனோஜ் குமாருக்கும் வாக்குவாதம் எழுந்தது. டிக்கெட் பரிசோதகர் கிருஷ்ணமூர்த்தி தலையிட்டு பிரச்னையை தீர்த்துவைக்க முயன்றுள்ளார். அப்போது தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், டிக்கெட் பரிசோதகரை நடிகர் மனோஜ் குமார் தாக்கினாராம். இந்த ரயில் நள்ளிரவு 1 மணி அளவில் ஈரோடு வந்தது. ஈரோடு ரயில் நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில், மனோஜ் குமாரை போலீஸார் கைது செய்தனர்.