எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தமிழகத்தில் இலங்கைப் பிரச்னை தேர்தல் பிரச்னையாக இருக்காது: பி.எஸ்.ஞானதேசிகன்

தமிழகத்தில் இலங்கைத் தமிழர் பிரச்னை தேர்தல் பிரச்னையாக என்றும் இருந்ததில்லை. ஏனென்றால் இலங்கைப் பிரச்னையை கையிலெடுத்து வரும் வைகோ தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகி இருக்க

News image
Updated On :28 ஆகஸ்ட் 2013, 12:16 pm

G.Sundararaj

தமிழகத்தில் இலங்கைத் தமிழர் பிரச்னை தேர்தல் பிரச்னையாக என்றும் இருந்ததில்லை. ஏனென்றால் இலங்கைப் பிரச்னையை கையிலெடுத்து வரும் வைகோ தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகி இருக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்தார்.சிதம்பரத்துக்கு கட்சி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்க இன்று வருகை தந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நான் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். காங்கிரஸ் கட்சி மிக எழுச்சியாக உள்ளது. இதை வாக்குகளாக மாற்ற வேண்டும்.காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர்கள் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்து பேச்சாளர்களுக்கு கோவையில் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வருவதற்கு வாய்ப்பில்லை. கூட்டணி குறித்து உள்கட்சியில் நடைபெறுவதை வெளிப்படையாக விவாதிப்பது நல்லதல்ல.காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக மனித உரிமை தீர்மானத்தின்போது கூட்டணியிலிருந்து விலகியது. தற்போது உணவுப் பாதுகாப்பு சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும். உணவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு இந்தியா முழுவதும் ஒரே நிலைப்பாடு இல்லை என்பது உண்மைதான்.

ஏழை மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு அளிக்கும் சோனியாகாந்தியின் கனவு திட்டம் இது. இத்திட்டம் குறித்து மத்திய, மாநில அரசுகள் உட்கார்ந்து பேசினால் இதற்கு தீர்வு ஏற்படும்.தமிழகத்துக்கு இத்திட்டத்தினால் மத்திய அரசு வழங்கிவரும் அரிசி தடைபடாது. பொதுவாக எந்த கட்சியாக இருந்தாலும் சரி, அரசியல் தலைவர்கள் மீது வழக்குப் போடுவது நல்ல ஆரோக்கியமான செயல் அல்ல.

தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து நேரடி தொடர்பு கொண்டவன் நான். ஒவ்வொரு முறை தாக்கப்படும்போது தொடர்பு கொண்டு விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.தற்போது பாம்பன் மீனவர்கள் மீண்டும் தாக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புத்த பிட்சுகள் மீது தாக்குதலுக்குப் பிறகு இலங்கை அரசு, மீனவர் பிரச்னையில் பிடிவாதம் பிடித்து வருகிறது.

பாஜக தலைவர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி எதிரியில்லை. அவருக்கு அவரே எதிரி. வருகிற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம் என பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.