வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ககூடாது என பிரதமருக்கு கடிதம் அனுப்பிய சிதம்பரம் மாணவர்கள்

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில்  பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக மாணவர் முன்னணியினர் சிதம்பரம் தலைமை தபால் நிலையத்தில் இன்று இந்திய பிரதமருக்கு 100 மாணவ,

News image
Updated On :28 ஆகஸ்ட் 2013, 10:38 am

G.Sundararaj

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில்  பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக மாணவர் முன்னணியினர் சிதம்பரம் தலைமை தபால் நிலையத்தில் இன்று இந்திய பிரதமருக்கு 100 மாணவ, மாணவியர்கள் கடிதம் அனுப்பி கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் மேலவீதி பெல்காம் அனந்தம்மாள் மண்டபத்தில் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே என வலியுறுத்தி தமிழக மாணவர் முன்னணியினர் கலந்துரையாடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பின்னர் தமிழக மாணவர் முன்னணியினர் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது. இந்திய பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கூடாது என வலியுறுத்தி அஞ்சல் அட்டைகளை எழுதினர். பின்னர் சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் சென்று இந்தியா, இலங்கை அரசுகளுக்கு எதிராக கோஷமி்ட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச்செயலாளர் ஆ.குபேரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: 2008-2009ல் இலங்கை ஈழத்தில் இறுதிக்கட்டப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றத்திற்காக சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், பன்னாட்டு மனித உரிமை மன்றத்தினராலும் கண்டனத்திற்குள்ளாகி போர்க்குற்ற விசாரணை கூண்டில் ராஜபட்சே அரசு உள்ளது. இந்நிலையில் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற்றால் ராஜபட்சே 2 ஆண்டுகளுக்கு காமன்வெல்த் நாடுகளின் தலைவராக இருப்பார். இனப்படுகொலை குற்றத்திலிருந்து ராஜபட்சே தப்பிக்க இது வழிவகுக்கும். எனவே இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது, இந்தியா அம்மாநாட்டில் பங்கேற்க கூடாது என ஆ.குபேரன் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் செ.மணிமாறன், து.மணிகண்டன், மு.அஞ்சாநெஞ்சன், ரோகேஷ், ம.அருண்குமார், சே.வெங்கடேஸ்வரன், ராமன், ரா.பவித்ரா, சுதா, ரா.ஐஸ்வர்யா உள்ளிட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். பின்னர் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு எழுதிய அஞ்சல் அட்டைகளை தபால் பெட்டியில் போட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.